உள்ளூர் செய்திகள்

மாணவ- மாணவிகளுக்கு இயற்கை உரம் தயாரிப்பு குறித்து செயல்முறை விளக்கம்

மாணவர்களுக்கு இயற்கை உரம் தயாரிப்பு செயல்முறை விளக்கம்

Published On 2022-07-10 09:40 GMT   |   Update On 2022-07-10 09:40 GMT
  • வளம் மீட்பு பூங்காவில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் வாரியாக பிரித்தல், உரம் தயாரித்தல், விற்பனை செய்தல் போன்ற பணிகள் பற்றிய செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
  • இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பற்றிய விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரூராட்சி செயல் அலுவலர் உஷா தலையில் நடைபெற்றது.

சுவாமிமலை:

முதல்-அமைச்சர் ஆணையின்படியும், மாவட்ட கலெக்டர் உத்திரவின்படியும், பேரூரா–ட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுரைகளின்படியும் பொது சுகாதாரத்தினை பேணிக்காத்து தூய்மையாக பராமரிக்க சுவாமிமலை பேரூராட்சியின் வளம் மீட்பு பூங்காவிற்கு சுவாமிமலை அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள், பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் ஒழித்தல், பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்துதல், இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பற்றிய விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரூராட்சி செயல் அலுவலர் உஷா தலையில நடைபெற்றது.

இதில் தீவிர தூய்மை பணி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வார்டு 3 லிங்கடித் தெரு, வார்டு 4 ஆதிதிராவிடர் தெரு, வார்டு 15 யாதவர் தெருக்களில் திடக்கழிவு மேலாண்மை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரித்தல், உரம் தயாரித்தல் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

வளம் மீட்பு பூங்காவில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் வாரியாக பிரித்தல், உரம் தயாரித்தல், விற்பனை செய்தல் போன்ற பணிகள் பற்றிய செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

அரசினர் மேல்நிலைப்பள்ளி, தெற்கு வடம்போக்கித் தெரு, முடுக்குத் தெரு ஆகிய தெருக்களில் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுவாமிமலை பேரூராட்சி மன்ற தலைவர்வை ஜெயந்தி, துணைத் தலைவர் சங்கர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், பேரூராட்சி பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News