உள்ளூர் செய்திகள்

குண்டுகாயம் அடைந்த சாந்தகுமாரி.

விருத்தாசலம் அருகே பரபரப்பு: நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்த பெண் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2022-06-26 12:41 IST   |   Update On 2022-06-26 12:41:00 IST
  • விருத்தாசலம் அருகே பரபரப்பு: நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்த பெண் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்
  • முயலை குறி வைத்து சுடும் போது அந்த குண்டு சாந்தகுமாரியின் இடுப்பு பகுதியில் பாய்ந்தி ருப்பது தெரிய வந்தது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் காசிபிள்ளை. இவரது மனைவி சாந்த குமாரி (வயது 21).இவர்கள் வயல்வெளி யில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். நேற்று வெளியூர் சென்ற கணவன்- மனைவி இரு வரும் நள்ளிரவில் வீடு திரும்பினர்.அப்போது சாந்தகுமாரி, தனது வீட்டு வாசலில் அமர்ந்து காற்று வாங்கி கொண்டிருந்தார். அப்ேபாது திடீரென சாந்த குமாரி பலத்த சத்தத்துடன் கீழே சுருண்டு விழுந்தார்.

அதிர்ச்சி அடைந்த காசிபிள்ளை வெளியே வந்தார். அப்போது தனது மனைவி ரத்த வெள்ளத்தில் வேதனையால் துடித்ததை கண்டு அதிர்ச்சி அடைந் தார்.உடனடியாக உற வினர்கள் உதவியுடன் சாந்தகுமாரியை விருத்தா சலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு செல்லப்பட் டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.அப்போது சாந்தகுமாரி யின் இடுப்பு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடக் கூடிய நாட்டு துப்பாக்கி குண்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

உடனடியாக அவர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மங்கலம் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வலசை கிராமங்களில் இரவு நேரங்களில் பறவை மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு நாட்டுத்துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் வருவதுண்டு. அவர்கள் முயலை குறி வைத்து சுடும் போது அந்த குண்டு சாந்தகுமாரியின் இடுப்பு பகுதியில் பாய்ந்தி ருப்பது தெரிய வந்தது.எனவே, துப்பாக்கியால் சுட்ட நபர் யார்? அவர்கள் எங்கு பதுங்கி உள்ளனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News