உள்ளூர் செய்திகள்

கிழக்கு ராமாபுரம் பகுதியில் எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்களை படத்தில் காணலாம்.

கடலூர் அருகே பரபரப்பு :பஞ்சாயத்து அலுவலகம் சுற்றுச்சுவரை இடிக்க பொது மக்கள் எதிர்ப்பு

Published On 2022-11-04 13:34 IST   |   Update On 2022-11-04 13:34:00 IST
  • அலுவலக சுற்றுச்சுவர் கட்டப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்து உள்ளதாக புகார் அளித்தார்‌.
  • சக்தி தலைமையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்‌.

கடலூர்:

கடலூர் அருகே கிழக்கு ராமாபுரத்தில் ஊராட்சி அலுவலகத்தில் சுற்றுச்சுவர் இருந்து வருகின்றது. அதே பகுதியை சேர்ந்த ஒரு நபர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொது வழியாக இருந்த இடத்தில் அலுவலக சுற்றுச்சுவர் கட்டப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்து உள்ளதாக புகார் அளித்தார்‌. அதன் பேரில் இன்று காலை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இத்தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் பெருமளவில் அங்கு திரண்டனர். பின்னர் பல ஆண்டுகளாக ஊராட்சி அலுவலகம் சுற்றி சுற்றுச்சுவர் இருந்து வந்த நிலையில் இடிக்க அனுமதிக்க மாட்டோம் என ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்‌. அப்போது சுற்றுச்சுவர் இடிக்காமல் அதற்கு மாறாக மாற்று வழி ஏற்படுத்துவதன் மூலம் அனைவரும் எளிமையாக சென்று வரலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் மாற்று வழி மூலம் செல்வதற்கு அதிகாரிகள் தற்போது அந்த இடத்தை அளவீடு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News