உள்ளூர் செய்திகள்

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜுவிடம் தேசிய கொடியினை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்

Published On 2022-08-08 09:17 GMT   |   Update On 2022-08-08 09:17 GMT
  • மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொடிகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • தனியார் கட்டிட உரிமையாளர்கள் தங்களது கட்டிடங்களில் தேசிய கொடியினை ஏற்றி பெருமை சேர்த்திட வேண்டும்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டத்தில் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் வரும் ஆகஸ்ட் 13 தேதி முதல் 15 தேதி வரை தேசியக்கொடி ஏற்றிட மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

3 நாட்களிலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கான கொடிகள் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அக்கொடியினை பெற்றுக்கொண்டு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் தேசியக்கொடியினை ஏற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும்.

அதேபோல் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஒளிரும் தேசியக்கொடி அமைக்கப்படவுள்ளது. தனியார் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் தங்களது கட்டிடங்களில் மேற்கண்ட நாட்களில் நமது நாட்டின் தேசிய கொடியினை ஏற்றி பெருமை சேர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பின்னா தேசிய கொடியினை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News