உள்ளூர் செய்திகள்

இளம்பெண்கள் மாயம்

Update: 2022-08-15 09:26 GMT
புளியம்பட்டி- சத்தியமங்கலம் பகுதியில் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் நம்பியூர், கே. மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி ஜோதிமணி (35). கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஜோதிமணி செலம்பரகவுண்டன் புதூரில் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டிலிருந்த ஜோதிமணி திடீரென மாயமாகிவிட்டார்.

அவரை பல்வேறு இடங்களில் அவரது உறவினர்கள் தேடினர். எனினும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது உறவினர்கள் புளியம்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜோதிமணியை தேடி வருகின்றனர். இதைப்போல் சத்தியமங்கலம், திருவள்ளுவர் நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் குமார். அவரது மனைவி நீலா (38). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நீலா தாளவாடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதாக சம்பவத்தன்று கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு வரவில்லை.

இதனால் அவரது உறவினர்கள் நீலாவை பல்வேறு இடங்களில் தேடினர் எனினும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதை அடுத்து அவரது உறவினர்கள் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நீலாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News