உள்ளூர் செய்திகள்

நாத கவுண்டன்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் தொடுதிரை கணினி மூலம் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டது..

அரசு பள்ளியில் அகன்ற தொடுதிரை கணினி வசதி

Published On 2023-04-13 15:05 IST   |   Update On 2023-04-13 15:05:00 IST
  • 32 பள்ளிக்கூடங்களுக்கு தனியார் நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.
  • ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கி உள்ளனர்.

மொடக்குறிச்சி:

அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு, பள்ளிக்கு தேவையான வசதிகளை மேம்படுத்திட நம்ம ஸ்கூல் திட்டம் தமிழக முதல்-அமைச்சரால் கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலமாக அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், சமுதாய தொண்டு நிறுவனங்கள், பெற்றோர்கள், புரவலர்கள் ஆகியோரிடம் இருந்து நன்கொடைகளை பெற்று பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பள்ளிக்கு தேவையான வசதிகளை இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் நன்கொடைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனையடுத்து மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் சுமார் 32 பள்ளிக்கூடங்களுக்கு பெரிய அகன்ற தொடுதிரை ஸ்மார்ட் போர்டு, கணினி, மாணவர்கள் அமரும் நாற்காலிகள், மேசைகள், இரும்பு பீரோக்கள் போன்றவைகளை தனியார் நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.

அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட நவீன தொடுதிரை கணினி மற்றும் மேசைகள், நாற்காலிகள் வழங்கியதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

ஒவ்வொரு பள்ளிக்கும் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கி உள்ளனர்.

மொடக்குறிச்சி வட்டாரம் கஸ்பாபேட்டை ஊராட்சிக்குட்பட்ட நாத கவுண்டன் பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் தொடுதிரை கணினி அமைக்கப்பட்டு பள்ளி ஆசிரியர் தாமஸ் மாணவ- மாணவிகளுக்கு வகுப்பு பாடங்களை கற்றுக்கொடுத்தார்.

நம்ம ஸ்கூல் திட்டத்தின் மூலம் கிடைத்த பொருட்களால் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பும், மகிழ்ச்சியும் பெற்றுள்ளது.

Tags:    

Similar News