உள்ளூர் செய்திகள்

மூட்டைகள் இறக்கும் போது தவறி விழுந்து தொழிலாளி பலி

Published On 2022-06-06 15:35 IST   |   Update On 2022-06-06 15:35:00 IST
  • தவுடு மூட்டைகளை இறக்கிய போது தவறி விழுந்து தலையில் அடிபட்டு மயங்கினார்.
  • சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு:

கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 72). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் வடுகபாளையம் புதூரில் இருந்து தவுடு லோடு ஏற்றி கொண்டு தாளவாடிக்கு சரக்கு வேனில் சென்றார். வேனை அப்துல் பாசித்து என்பவர் ஓட்டி சென்றார்.

தாளவாடி கொங்கள்ளி ரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தின் முன்பு சரக்கு வேனை நிறுத்தி அதில் இருந்து சுப்பிரமணியம் தவுடு மூட்டைகளை இறக்கி கொண்டு இருந்தார்.

அப்போது அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் அவருக்கு பின் தலையில் அடிப்பட்டு மயங்கி விழுந்தார்.

அவருடன் வந்தவர்கள் அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News