உள்ளூர் செய்திகள்

கல்லூரிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி

Published On 2022-06-11 06:56 GMT   |   Update On 2022-06-11 06:56 GMT
  • சத்தியமங்கலம் காம தேனு கலை அறிவியல் கல்லூரியில் பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.
  • கல்லூரி நிறுவனத்தலைவர் பெருமாள்சாமி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் காம தேனு கலை அறிவியல் கல்லூரியில் புதிய கைப்பந்து ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடை பெற்றது.

பாரதியார் பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினரும் கல்லூரியின் செயலருமான அருந்ததி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக காமதேனு கல்வி குழுமத்தின் நிறுவனர் பெருமாள்சாமி கலந்து கொண்டு புதிய ஆடுகளத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து "காமதேனு டிராபி 2022" என்ற பெயரில் பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி கள் நடைபெற்றது.

இதில் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு கல்லூரிகளின் கைப்பந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

இறுதிப்போட்டிக்கு 4 அணிகள் தேர்வு பெற்றன. இதில் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி முதல் இடத்தையும், கோவை ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அணி 2-ம் இடத்தையும், கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரி அணி 3-ம் இடத்தையும், கோவை குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 4-ம் இடத்தையும் பெற்றது.

வெற்றி பெற்ற அணி களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை, 2-ம், 3-ம் மற்றும் 4-ம் பரிசுகள் முறையே ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

கல்லூரி நிறு வனத்தலைவர் பெருமாள்சாமி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லூரி செயலர் அருந்ததி, இணைச் செயலர் மலர்செல்வி, கல்லூரி முதல்வர் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் வாழ்த்தி பேசினர்.

Tags:    

Similar News