உள்ளூர் செய்திகள்

பால் வடிந்ததாக கூறப்பட்ட அரச மரத்தை படத்தில் காணலாம்.

விநாயகர் கோவில் அரச மரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு

Published On 2023-04-15 15:22 IST   |   Update On 2023-04-15 15:22:00 IST
  • அரச மரத்தில் இருந்து பால் வடிந்த அதிசய நிகழ்வை பார்த்தனர்.
  • அங்குள்ள விநாயகரை பொதுமக்கள் தரிசித்து சென்றனர்.

சென்னிமலை:

சென்னிமலை யூனியன் முகாசிப்பிடாரியூர் ஊராட்சி1010 நெசவாளர் காலனியில் விநாயகர் கோவில் உள்ளது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விநாயகரை வழிபட அதிகாலையில் சென்றனர்.

அப்போது விநாயகர் கோவிலில் உள்ள வேப்பமரம் மற்றும் அரசமரம் இரண்டும் ஒன்றாக உள்ள இடத்தில் அரச மரத்தில் இருந்து பால் வடிந்ததை கண்டு பொது மக்கள் ஆச்சரிய மடைந்னர்.

உடனே தகவல் சுற்று வட்டாரத்தில் பரவியது.

இதையடுத்து அருகில் உள்ள பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து அரச மரத்தில் இருந்து பால் வடிந்த அதிசய நிகழ்வை பார்த்தனர். மேலும் அங்குள்ள விநாயகரை தரிசித்து சென்றனர்.

விநாயகர் கோவிலில் உள்ள அரச மரத்தில் இருந்து பால் வடிந்தது சென்னிமலை வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

Tags:    

Similar News