உள்ளூர் செய்திகள்

பவானி புதிய பஸ் நிலையம் அருகில் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-09-04 14:28 IST   |   Update On 2023-09-04 14:28:00 IST
  • பவானி புதிய பஸ் நிலையம் அருகில் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
  • புதிய பஸ் நிலையம் அருகில் அனைவருக்கும் வாழ்வாதாரம் பாதிக்காமல் புதிய தினசரி காய்கனி மார்க்கெட் வளாகம் கட்டிக் கொடுக்க வேண்டும் என கண்டன கோஷங்கள் போட்டு கண்டன உரையாற்றினர்

பவானி,

பவானி அந்தியூர் பிரிவு ரோட்டில் பவானி வட்டார ஏ.ஐ.டி.யு.சி. தினசரி காய்கனி மார்க்கெட் அழுதும் பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் தினசரி காய்கனி மார்க்கெட் வளாகம் அமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பவானி தினசரி காய்கறி மார்க்கெட் வளாகத்தை புதிய பஸ் நிலையம் அருகில் அமைக்க கோரியும், தற்போது இயங்கி வரும் தினசரி மார்க்கெட் (வார சந்தை வளாகம்) வளாகம் பொதுமக்களுக்கும் காய்கறி கொண்டு வரும் வியாபாரிகள் வண்டி வாகனங்களுக்கும் செல்வதற்கு மிகவும் குறுகலான பாதையாக உள்ளதால் வியாபாரிகளும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கோபி, சத்தியமங்கலம், புளியம்பட்டி போன்ற நகராட்சி பகுதியில் காய்கறி மார்க்கெட் பஸ் நிலையம் அருகிலும் மெயின் ரோட்டிலும் அமைந்துள்ளது. எனவே பவானி தினசரி மார்க்கெட்டை பவானி புதிய பஸ் நிலையம் அருகில் அமைத்திட வேண்டும். பவானி புதிய பஸ் நிலையம் அருகில் நகராட்சிக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலம் உள்ளது. பவானி நகராட்சியில் தினசரி காய்கனி மார்க்கெட் இடம் மாற்றுவது குறித்து பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் சர்வ கட்சினர் கலந்து கொண்ட கருத்து கேட்பு கூட்டம் 2 முறை நடைபெற்றது.

ஆகவே நகராட்சி நிர்வாகம் கேட்பு கூட்ட முடிவின்படி பொதுமக்கள் மார்க்கெட் வியாபாரிகள், விவசாயிகள் நலன் கருதி தினசரி காய்கனி மார்க்கெட் வளாகத்தை புதிய பஸ் நிலையம் அருகே அமைத்து கொடுக்க வேண்டும் எனவும், வாரச்சந்தையில் தற்போது இடித்து புதிதாக கட்டப்படுமானல் இதில் 236 வியாபாரிகள் உள்ளனர். ஆனால் 120 முதல் 150 வரை மட்டுமே புதிய கடை கட்ட முடியும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு கடை இல்லாமல் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கும்.

எனவே புதிய பஸ் நிலையம் அருகில் அனைவருக்கும் வாழ்வாதாரம் பாதிக்காமல் புதிய தினசரி காய்கனி மார்க்கெட் வளாகம் கட்டிக் கொடுக்க வேண்டும் என கண்டன கோஷங்கள் போட்டு கண்டன உரையாற்றினர்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர் மன்ற துணைத் தலைவர் மணி, மாவட்ட செயலாளர் சிவராமன், தலைவர் சந்திரசேகர், பவானி வட்டார ஏ.ஐ.டி.யு.சி. தினசரி காய்கனி மார்க்கெட் அழுகும் பொருள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சண்முகம், தனக்கொடி, மாதேஸ்வரன், கார்த்தி, சரவணன் உட்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News