உள்ளூர் செய்திகள்

மழையில் வீடு இடிந்து விழுந்தது

Published On 2022-10-21 15:31 IST   |   Update On 2022-10-21 15:31:00 IST
  • வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுவதை பார்த்தவுடன் 2 குழந்தைகளையும் தூக்கி கொண்டு வெளியே ஓடி வந்து விட்டனர்.
  • இதனால் அதிர்ஷ்டவசமாக 4 பேரும் உயிர் தப்பினர்.

அந்தியூர்:

அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய மழை பொழிந்தது. அந்தியூர் அருகே உள்ள அண்ணமார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுமணி (36). செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வருகின்றார்.

இந்த நிலையில் நேற்று இரவு வேலுமணி அவரது 2 குழந்தைகள் மற்றும் மனைவி நித்தியா ஆகியோர் மழையின் போது வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இரவு 11 மணி அளவில் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. விழும் சத்தம் கேட்டு அலறி அடித்து கொண்டு கணவன், மனைவி இருவரும் எழுந்துள்ளனர்.

இதனையடுத்து வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுவதை பார்த்தவுடன் 2 குழந்தைகளையும் தூக்கி கொண்டு வெளியே ஓடி வந்து விட்டனர். இதனை தொடர்ந்து பக்கத்து வீடான அவரது நண்பர் குணசேகர் என்பவரது வீட்டில் இரவு முழுவதும் 4 பேரும் தங்கினர். இதனால் அதிர்ஷ்டவசமாக 4 பேரும் உயிர் தப்பினர்.

இதுகுறித்து சின்னத்தம்பி பாளையம் ஊராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுமதி தவசியப்பன், ஊராட்சி செயலாளர் கேசவன் (பொறுப்பு ) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

Tags:    

Similar News