உள்ளூர் செய்திகள்

கைரேகை பதிவாகாதவர்களுக்கு அரசு பொங்கல் பரிசு வீடு தேடி வரும்

Published On 2022-12-24 15:33 IST   |   Update On 2022-12-24 15:33:00 IST
  • ரேஷன் கடைகளில் முதியோர்கள் பொருட்கள் வாங்க செல்லும்போது கைரேகை பதிவாகவில்லை என திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
  • கைரேகை பதிவாக நபர்கள் குறித்து ரேஷன் ஊழியர்கள் கணக்கெடுத்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

பவானி:

ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள கவுந்தப்பாடி மெயின் ரோடு, மூவேந்தர் நகர் பகுதியில் ஈரோடு மாவட்ட நெடுஞ்சாலை துறை மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் பவானி நகருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நடத்தி பணிகளை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக ரூ.49.51 கோடி மதிப்பீட்டிலும், 2-வது கட்டமாக ரூ.36.28 கோடி மதிப்பீட்டிலும் என ரூ.85.79 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ள இப்பணிகளை தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தற்போது ரேஷன் கடைகளில் முதியோர்கள் பொருட்கள் வாங்க செல்லும்போது கைரேகை பதிவாகவில்லை என திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

பொங்கல் பரிசு வழங்கப்படும் நிலையில் அவர்களுக்கு பணம் வழங்குவது தடைபடும் என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில் அந்த மாதிரி சில பிரச்சனை இருந்தால் அது தனிப்பட்ட முறையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.

பெரிய எண்ணிக்கையில் இதுபோல் பிரச்சனை இருக்காது. குறைந்த எண்ணிக்கையில் இருக்கும். எனவே அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் அதிகாரிகளை கேட்டுக்கொள்வது என்ன வென்றால் இதுபோல் கைரேகை பதிவாக நபர்கள் குறித்து ரேஷன் ஊழியர்கள் கணக்கெடுத்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

பின்னர் அவர்கள் பெயர் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு அவர்களின் வீட்டுக்கு தேடி சென்று பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், இந்து அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், ஈரோடு ஒன்றிய செயலாளர் தோப்பு சதாசிவம், பவானி நகர தி.மு.க. செயலாளர் நாகராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News