உள்ளூர் செய்திகள்

பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள்

Published On 2022-11-08 15:32 IST   |   Update On 2022-11-08 15:32:00 IST
  • ஈரோடு கலை மகள் கல்வி நிலையத்திலும், கல்லூரி மாணவர்களு க்கான போட்டிகள் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியிலும் நடைபெறுகிறது.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர்- தலைமை ஆசி ரியர் ஒப்பம் பெற்று போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சி துணை இயக்கு நரிடம் நேரில் அளிக்க வேண்டும்.

ஈரோடு:

தமிழக அரசின் ஆணை க்கிணங்க தமிழ் வளர்ச்சித் தறை சார்பில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

அதன்படி ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி பேச்சு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதையொட்டி வரும் 14-ந் தேதி பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் ஈரோடு கலை மகள் கல்வி நிலையத்திலும், கல்லூரி மாணவர்களு க்கான போட்டிகள் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியிலும் நடைபெறுகிறது.

எனவே மாணவர்கள் பேச்சுப் போட்டி களுக்கான விண்ணப்பப் படிவங்களை அவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர்வரிடம் இருந்து பெற்று கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர்- தலைமை ஆசி ரியர் ஒப்பம் பெற்று போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சி துணை இயக்கு நரிடம் நேரில் அளிக்க வேண்டும்.

மாவட்ட அளவில் பள்ளி- கல்லூரிப் போட்டி யில் வெற்றி பெறும் மாண வர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்படும்.

மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சு போட்டியில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தேர்வு செய்து சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News