உள்ளூர் செய்திகள்

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.16.57 லட்சத்துக்கு நிலக்கடலைக்காய் விற்பனை

Published On 2023-09-07 09:25 GMT   |   Update On 2023-09-07 09:25 GMT
  • சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.16.57 லட்சத்துக்கு நிலக்கடலைக்காய் விற்பனை நடைபெற்றது
  • விவசாயிகள் 790 மூட்டைகள் கொண்ட 23 ஆயிரத்து 999 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காயை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.

சிவகிரி,

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 790 மூட்டைகள் கொண்ட 23 ஆயிரத்து 999 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காயை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.62.39-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.84.30-க்கும், சராசரி விலையாக ரூ.74.50-க்கும் விற்பனையானது. நிலக்கடலைக்காய் மொத்தம் ரூ.16 லட்சத்து 57 ஆயிரத்து 14-க்கு விற்பனையானது.

Tags:    

Similar News