உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.

வேளாண்மை அதிகாரி வீட்டில் ரூ.2.80 லட்சம் கொள்ளை

Published On 2023-03-24 15:26 IST   |   Update On 2023-03-24 15:26:00 IST
  • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
  • ரூ.2.80 லட்சம் கொள்ளை போனது தெரிய வந்தது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்தவர் பழனிச்சாமி (50). இவர் அம்மாபேட்டையில் உள்ள வேளாண் அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளார்.

இவரது மனைவி தவமணி. இவர் பவானி அருகே தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் பவிஷ்கர் ஐதராபாத்தில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பழனிச்சாமியும், அவரது மனைவி தவமணியும் வேலைக்கு சென்று விட்ட னர். வீட்டில் பழனிச்சாமி யின் தாயார் மட்டும் இருந்துள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் அவரும் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு மற்றும் கதவு கடப்பாறையால் நெம்பி உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடை ந்தார்.

இது குறித்து பழனிச் சாமிக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டினுள் பேக்கில் இருந்த ரூ.2.80 லட்சம் கொள்ளை போனது தெரிய வந்தது.

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.

இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்ட னர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.

வீட்டில் பொருத்தப்பட்டி ருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது 3 பேர் இருசக்கர வாகனத்தில் பழனிச்சாமி வீட்டில் இருந்து செல்வது பதிவாகி இருந்தது.

இதன் அடிப்படையில் கவுந்தப் பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த திருட்டில் பழனிச் சாமியின் நெருங்கியவர்கள் யாராவது ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News