உள்ளூர் செய்திகள்

திடீர் புகை மண்டலத்தால் பொதுமக்கள் திணறல்

Published On 2022-07-11 09:57 GMT   |   Update On 2022-07-11 09:57 GMT
  • சென்னிமலை பேரூராட்சி குப்பை கிடங்கில் திடீர் புகை மண்டலத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
  • உடனே தீயணைப்பு அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.அவர்கள் வந்து தண்ணீரை பீய்ச்சி அடிச்சி தீயை அணைத்தனர்.

சென்னிமலை:

சென்னிமலை டவுன், உப்பிலிபாளையம் ரோட்டில் குன்று பகுதியில் பேரூராட்சி குப்பைகள் கொட்டப்படும் கிடங்கு உள்ளது.

நேற்று காலை குப்பைகள் கொட்டியுள்ள பகுதியிலிருந்து திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது. சிறிது நேரத்தில் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மற்றும் அருகில் வசிக்கும் மக்கள் குப்பைகளில் இருந்து வெளியேறிய புகையால் திணறினர்.

உடனே பேரூராட்சி அலுவலகத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு நிலையத்தினர் உடனடியாக அங்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் குப்பைகளை கிளறி அதில் உள்ள தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். அப்போது பேரூராட்சி பணியா–ளர்களும் உடனிருந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இப்பகுதியில் ஏற்பட்ட திடீர் புகை மண்டலம் சிறிது நேரம் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுத்தியதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர். குப்பைகளில் பிடித்த தீ முழுவதும் அணைக்க–ப்பட்டதால் புகை மண்டலம் கட்டுக்குள் கொண்டு–வரப்பட்டு இயல்பு நிலை திரும்பியது. குப்பையில் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.–––

Tags:    

Similar News