உள்ளூர் செய்திகள்

பல்நோக்கு மருத்துவமனை கட்டிட பணியை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு

Published On 2022-09-28 15:11 IST   |   Update On 2022-09-28 15:11:00 IST
  • ஈரோடு அரசு மருத்துவ மனை வளாக பகுதியில் ரூ.64 கோடி மதிப்பில் 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை இன்று காலை அமைச்சர்கள் வேலு, முத்துசாமி ஆடியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
  • இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஈரோடு:

ஈரோடு அரசு மருத்துவ மனை வளாக பகுதியில் ரூ.64 கோடி மதிப்பில் 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை இன்று காலை அமைச்சர்கள் வேலு, முத்துசாமி ஆடியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 2 ஆயிரம் புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு ரூ.64 கோடி மதிப்பில் 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் இந்த பணிகள் நிறைவடையும்.

இதில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, அறுவை மற்றும் எலும்பு தொடர்பான சிகிச்சைகள், நரம்பியல் சிகிச்சைகள் உட்பட பல்வேறு பிரிவுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். முறையான பதிவேடுகள் பராமரி க்கப்பட்டு வருகிறது.

கட்டிடம் தரமான முறையில் கட்டப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரிக்கு முன்பு மேம்பாலம் செல்கிறது. அங்கு சர்வீஸ் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு அங்கு சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்றால் அரசு ஆஸ்பத்தி ரியில் 3.30மீட்டர் அகலம் இடம் தேவைப்படுகிறது.

இது ( சுகாதாரம், நெடுஞ்சாலை துறை) ஆகிய 2 துறை சம்பந்தப்ப ட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும். மேலும் நான் சென்னை சென்றதும் இது குறித்து முதல்- அமைச்சரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது கலெக்டர் கிருஷ்ண னுண்ணி, தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. மேயர் நாகரத்தினம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள ரெயில்வே மேம்பா லத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து மேல் திண்டலில் சாலையோர மரக்கன்றுகளை நடும் பணிகளை தொடங்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News