உள்ளூர் செய்திகள்

மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-07-07 09:19 GMT   |   Update On 2022-07-07 09:19 GMT
  • சென்னிமலை அருகேயுள்ள, முருங்கத் தொழுவு, மயிலாடி மாகாளி–யம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது.
  • தொடர்ந்து, தச தானம், மகா அபிேஷகம், அலங்கார பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது.

சென்னிமலை:

சென்னிமலை அருகேயுள்ள, முருங்கத் தொழுவு, மயிலாடி மாகாளி–யம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது.

சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சி, மயிலாடி யில், பழமையான செல்வ விநாயகர் மற்றும் மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மகா கும்பாபிேஷக விழா, 5-ந் தேதி, மங்கள இசையுடன் தொடங்கியது.

தொடர்ந்து, இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு, இரண்டாகாம் கால யாக பூஜை, நிறைவேள்வி, தீபாராதனை நடந்தது. காலை, 6.45 மணிக்கு விமான கலசங்களுக்கு சம கால கும்பாபிேஷகமும், பின்னர், செல்வ விநாயகர், மாகாளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, தச தானம், மகா அபிேஷகம், அலங்கார பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது.

இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிேஷகத்தினை முருங்கத்தொழுவு கிராம பிரலிங்கேஸ்வரர் கோவில் பரம்பரை அர்ச்சகர் சிவாகம ரத்னம் சிவஸ்ரீ. அமிர்தலிங்க சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரி–யார்கள் நடத்தி வைத்தனர். விழாவில் அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஊஞ்சலூர் அருகில் கிளாம்பாடிகிராமம் கருமாண்டாம் பாளையத்தில் பழமையான பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் கற்பக விநாயகர், கருப்பண்ணசாமி, பொட்டுசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிசேகம் நடைபெற்றது.

தொடர்ந்து அனைத்து சுவாமிகளுக்கும் மஹா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிசேக நிகழ்ச்சிகளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

Tags:    

Similar News