உள்ளூர் செய்திகள்
- ஜஜினாவும், சக்திவேலும் திருமணம் செய்து கொண்டு கொடுமுடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
- இதனையடுத்து போலீசார் இரு குடும்பத்தையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரபுவுடன் ஜஜினாவை அனுப்பி வைத்தனர்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே உள்ள காசிபாளையத்தை சேர்ந்தவர் இஸ்மாயில். இவரது மகள் ஜஜினா (23). இவர் அதே பகுதியை சேர்ந்த மலைச்சாமி என்ப வர் மகன் பிரபு என்கிற சக்திவேல் என்பவரை கடந்த 4 வருடமாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஜஜினாவும், சக்திவேலும் திருமணம் செய்து கொண்டு கொடுமுடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இதனையடுத்து போலீசார் இரு குடும்பத்தையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரபுவுடன் ஜஜினாவை அனுப்பி வைத்தனர்.