- தொழிற் சாலையின் முன் பகுதியில் டிப்பர் லாரியை சுத்தம் செய்வதற்காக லாரியின் பின்பகுதியை மேலே தூக்கி உள்ளார்.
- இதில் கோபால் மீது மின்சாரம் பாயந்தது.
சென்னிமலை:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுதத வனவாசி புதுப்பேட்டை காலனியைச் சேர்ந்தவர் கோபால் ( 53 ). இவர் டிப்பர் லாரியில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி அமுதா. கோபால் சென்னி மலை அருகே உள்ள ஈங்கூர் பகுதியில் தனியாக தங்கி உள்ளார்.
ஒரு தனியார் நிறுவன த்தில் கோபால் டிப்பர் லாரி ஓட்டி வந்தார். இந்நிலையில் கோபால் ஈங்கூரில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலைக்கு லோடு ஏற்ற டிப்பர் லாரியுடன் சென்றுள்ளார்.
அப்போது அந்த தொழிற் சாலையின் முன் பகுதியில் டிப்பர் லாரியை சுத்தம் செய்வதற்காக லாரியின் பின்பகுதியை மேலே தூக்கி உள்ளார். அப்போது அங்கு மேல் பகுதியில் இருந்த உயர் மின்னழுத்த மின் கம்பியில் டிப்பர் லாரியின் பகுதி உரசியது.
இதில் கோபால் மீது மின்சாரம் பாயந்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை செல்லும் வழியிலேயே கோபால் இறந்து விட்டார். இதுகுறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.