உள்ளூர் செய்திகள்

கர்நாடக டிரைவர் மர்ம சாவு

Published On 2022-12-24 09:59 GMT   |   Update On 2022-12-24 09:59 GMT
  • சம்பவத்தன்று மதியம் ராஜேஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
  • போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு:

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர், எப்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (42). ஹிட்டாச்சி வண்டி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜோதி.

இந்நிலையில் ராஜேஷ் ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த புத்தி கட்டையில் உள்ள வெங்கடாசலபதி என்பவர் நிலத்தை குத்தகைக்கு ஒட்டி வரும் பூமியை சமப்படுத்தும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். சம்பவத்தன்று மதியம் ராஜேஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்து அவரது மனைவி ஜோதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது ராஜேஷின் வலது கையில் காயமும், மணிக்கட்டு பகுதியில் காயமும், கழுத்து கீழ்ப்பகுதியில் காயமும் ஏற்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து அவர் தாளவாடி போலீசில் புகார் செய்தார். அதில் தனது கணவர் சாவில் மர்மம் உள்ளதா கவும், விசாரித்து நடவடி க்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதன் பேரில் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News