உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

Published On 2022-10-20 15:07 IST   |   Update On 2022-10-20 15:07:00 IST
  • ஈரோடு மாவட்ட கண்கா ணிப்பு அலுவலர் பிரகாஷ் கந்தன் பட்டறை மற்றும் பவானி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள முகாம் போன்ற இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
  • அப்போது குடியிருப்பு வாசிகள் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனவும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பவானி:

பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன் பட்டறை தந்தை பெரியார் வீதி கீரைக்கார தெரு மற்றும் பாலக்கரை வீதி போன்ற பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகளை அந்தந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு மையங்களில் வருவாய் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாக த்தினர் தங்க வைத்து பல்வேறு வகையான அத்தி யாவசிய தேவைகளையும் செய்து வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதி க்கப்பட்ட பொதுமக்களை ஈரோடு மாவட்ட கண்கா ணிப்பு அலுவலர் பிரகாஷ் கந்தன் பட்டறை மற்றும் பவானி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள முகாம் போன்ற இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது குடியிருப்பு வாசிகள் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனவும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல் ஒரு சிலர் தாங்கள் பணம் கட்டி பல மாதங்கள் ஆகியும் தங்களுக்கு வீடு வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் மீனவ குடும்பத்தினர் தங்களுக்கு இதே பகுதியில் வீடு ஒதுக்கிட வேண்டும் எனவும் மாற்று இடங்கள் சென்றால் எங்களால் மீனவ தொழிலில் ஈடுபட முடியாது என தெரிவித்துள்ளனர்.

அதேபோல் அரசு ஒதுக்கீடு செய்யும் அடுக்கு மாடி குடியிருப்பு தொகை ரூ.80 ஆயிரம் கட்ட மிகுந்த சிரமம் உள்ளதால் அரசு கடன் உதவி செய்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் தங்கள் கோரிக்கை குறித்து அரசிடம் தெரிவி த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

ஆய்வின்போது பவானி தாசில்தார் ரவிச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் சரவணன், நகர்மன்ற தலைவர் சிந்தூரி இள ங்கோவன், ஆணையாளர் தாமரை, கவுன்சிலர் சரவணன் உள்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News