உள்ளூர் செய்திகள்

பாஸ்ட் புட் கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-11-20 14:56 IST   |   Update On 2022-11-20 14:56:00 IST
  • சிவக்குமார் தனது வீட்டில் விஷம் அருந்தி மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
  • இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் அடுத்த அத்தாணி செம்புளிசாம்பாளையம் நடராஜ் தோட்டத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (30). பாஸ்ட் புட் கடை நடத்தி வந்தார்.

சிவகுமாருக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி தீபா என்கிற தீபலட்சுமி என்ற மனைவியும், கிஷோர் ஒன்றரை வயது மகனும் உள்ளனர்.

இவர் சில மாதங்களுக்கு முன்பு கள்ளிப்பட்டியில் வசித்துக் கொண்டு பாஸ்ட் புட் கடை நடத்தி வந்துள்ளார். இதில் போதிய வருமானம் இல்லாததால் சிவக்குமார் இத்தொழிலை கை விட்டுள்ளார்.

தற்பொழுது சிவக்குமார் தனது தந்தை வீட்டுக்கு பக்கத்தில் மனைவி குழந்தை–யுடன் இருந்து வசித்து வந்தார். சிவக்குமார் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படு–கிறது.

இந்நிலையில், சிவகுமாருக்கும் அவரது மனைவி தீபாவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப சண்டை இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று காலை 8 மணியளவில் சிவக்குமார் வெளியில் சென்று வருவதாக மனைவி தீபாவிடம் சொல்லி விட்டு சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தார் சிவக்குமாரை தேடியுள்ளனர். இந்த நிலையில் சிவக்குமாரின் நண்பர் கள்ளிப்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவர் சிவக்குமாரின் உறவினர் சென்னியப்பன் என்பவருக்கு போன் செய்து சிவக்குமார் தனது வீட்டில் விஷம் அருந்தி மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிவக்குமாரின் குடும்பத்தார் பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிவக்குமார் இறந்து கிடந்ததை கண்டு உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News