உள்ளூர் செய்திகள்

2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Published On 2023-05-12 09:34 GMT   |   Update On 2023-05-12 09:34 GMT
  • குழாய் பழுதடைந்து விட்டதால் பழுது சரிபார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
  • பொதுமக்கள் விநியோகிக்கப்பட்ட குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்க கொள்ள வேண்டும்.

ஈரோடு:

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாநகராட்சி சென்னிமலை சாலை மற்றும் ஈ.வி.என்.சாலை சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியின் போது பிரதான குடிநீர் விநியோக குழாய் பழுதடைந்து விட்டதால் பழுது சரிபார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் காரணமாக ஈரோடு மாநகராட்சி 3-ம் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 51-ல் உள்ள இ.எம்.எம். மெயின் வீதி, இ.எம்.எம். வீதி, மணல்மேடு வீதி, சென்னிமலை சாலை,

4-ம் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 52-ல் உள்ள ஈஸ்வரன் வீதி, கள்ளியங்காடு பகுதி, பட்டக்காரர் வீதி, தங்கபெருமாள் வீதி, ஜீவானந்தம் சாலை, புதுமை காலனி ஆகிய பகுதிகளில் இன்று (12-ந் தேதி), நாளை (13-ந் தேதி) 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்க கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News