உள்ளூர் செய்திகள்

சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், முடி காணிக்கை மண்டபம்

Published On 2022-09-12 10:01 GMT   |   Update On 2022-09-12 10:01 GMT
  • சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் நடத்தப்பட்டு வருகிறது.
  • இந்த நிலையில் கோவிலில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணி இன்று காலை பூமி பூஜையுடன் தொடங்கியது.

சென்னிமலை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஈரோடு மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெரு மானை தரிசனம் செய்து வருகிறார்கள்.

முகூர்த்த நேரத்தில் ஏராளமான ஜோடிகளுக்கு மலை மீதுள்ள சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக கோவில் உபயதாரர் நிதி மூலம் ரூ.93 லட்சம் மதிப்பில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் மற்றும் கோவில் நிதி மூலம் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் முடி காணிக்கை மண்டபம் கட்டிடம் கட்ட கடந்த மாதம் ஈரோட்டில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில் கோவிலில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணி இன்று காலை பூமி பூஜையுடன் தொடங்கியது.

Tags:    

Similar News