உள்ளூர் செய்திகள்

கோவை டி.ஐ.ஜி. முத்துசாமி திடீர் ஆய்வு

Published On 2022-10-23 12:26 IST   |   Update On 2022-10-23 12:26:00 IST
  • கோவை டி.ஐ.ஜி முத்துசாமி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் மற்றும் கடம்பூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
  • இந்த 2 போலீஸ் நிலையங்களின் பதிவேடுகள், வழக்கு கோப்புகள் ஆகியவைகளை ஆய்வு செய்தார்.

டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு கோவை டி.ஐ.ஜி முத்துசாமி வருகை புரிந்து திடீரென ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று கோவை டி.ஐ.ஜி முத்துசாமி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் மற்றும் கடம்பூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த 2 போலீஸ் நிலையங்களின் பதிவேடுகள், வழக்கு கோப்புகள் ஆகியவைகளை ஆய்வு செய்தார். மேற்படி போலீஸ் நிலையங்களின் இன்ஸ்பெக்டர் வடிவேல், உதவி ஆய்வாளர்கள் மற்றும் இதர போலீசாரின் குடும்ப நலனை பற்றி விசாரித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பங்களாபுதூர் போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

அலுவலக பதிவேடுகள், வழக்கு கோப்புகள் பராமரிப்பு மற்றும் வழக்குகளின் கண்டுபிடிப்பு ஆகியவைகளை ஆய்வு செய்து பாராட்டினார். மேலும் ஆன்லைன் சூதாட்ட த்தால் எவருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் சம்ம ந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், காவல் துறை பொதுமக்களின் நண்பனாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மற்றும் சத்தியமங்கலம் உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகரன், கோபி போலீஸ் துணை சூப்பிரண்டு சியாமளா தேவி உள்பட போலீசார் உடனிருந்தனர்.

Tags:    

Similar News