உள்ளூர் செய்திகள்
லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் மீது வழக்கு
- லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் மீது வழக்கு செய்யபட்டுள்ளது
- அவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் 3 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பவானி மெயின் ரோடு சுண்ணாம்பு ஓடை பஸ் ஸ்டாப் மற்றும் பிரம்மதேசம் ஆகிய பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக அந்தியூர், கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபினாமத் என்ற குமார் (வயது 21) மற்றும் வினோத் என்ற சிவன், ராமநாதபுரம் மாவட்டம் மண்டலகோட்டை புதூரை சேர்ந்த பிச்சை மகன் காளீஸ்வரன் (39), பெரிய சேமூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் மகன் சதீஷ் (29) மற்றும் குமார் ஆகியோரை போலீசார் பிடித்தனர். பின்னர் அவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் 3 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.