உள்ளூர் செய்திகள்
- புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு பில்டிங்கில் லிப்ட் கனெக்ஷன்காக வைத்திருந்த கேபிள் வயரை 45 மீட்டர் அளவுக்கு மர்ம நபர்கள் எடுத்து சென்று விட்டனர்.
- இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
பெருந்துறையை அடுத்துள்ள பட்டக்காரன் பாளையம் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான பால் கம்பெனி இயங்கி வருகிறது.
இந்த கம்பெனியில் செக்யூரிட்டி பணியாளராக பணிபுரிந்து வருபவர் மாயதேவன். கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு பில்டிங்கில் லிப்ட் கனெக்ஷன்காக வைத்திருந்த கேபிள் வயரை 45 மீட்டர் அளவுக்கு மர்ம நபர்கள் எடுத்து சென்று விட்டனர்.
இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும். மாயதேவன் மற்றும் கம்பெனி ஊழியர்கள் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கேபிள் வயர் கிடைக்கவில்லை.
பின்னர் இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.