உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-19 14:31 IST   |   Update On 2022-06-19 14:31:00 IST
  • ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • சட்டவிரோதமாக கரு முட்டை விற்பனை செய்தவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு:

ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் போலியான ஆவணங்களை தயார் செய்த கும்பல் மீதும், சட்டவிரோதமாக கரு முட்டை விற்பனை செய்தவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மாவட்ட பொது செயலாளர்கள் எஸ்.எம். செந்தில், வேதானந்தம், ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட துணை தலைவர்கள் சின்னதுரை, குணசேகரன், அய்யாசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேஷ்குமார்,

வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ஈஸ்வர மூர்த்தி, தொழில் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக், செயலாளர் பாலமுரளி, சக்திசுப்பிரமணி, பி.எஸ்.செல்வமணி, இந்திரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News