தமிழ்நாடு செய்திகள்

Union Budget 2026: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கைகள் இடம்பெறவில்லை

Published On 2026-02-01 13:12 IST   |   Update On 2026-02-01 13:12:00 IST
  • தமிழ்நாட்டுக்கான புதிய ரெயில்வே திட்டங்கள் தவிர வேறு எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
  • இது பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.

சென்னை:

மத்திய அரசின் பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் இன்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கான கீழ்க்கண்ட் அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்த்தார்.

அதாவது கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம், விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான ரூ.3548 கோடி கல்வி நிதி, ஜல்ஜீவன் திட்டத்துக்கான ரூ.3,112 கோடி நிதி, புதிய ரெயில்வே திட்டங்கள், நிதி ஆணையம் பரிந்துரைப்படி ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50 சதவீத நிதிப்பகிர்வு ஆகியவற்றை எதிர்பார்த்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதில் தமிழ்நாட்டுக்கான புதிய ரெயில்வே திட்டங்கள், தவிர வேறு எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இது பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.

Tags:    

Similar News