தமிழ்நாடு செய்திகள்
null
Union Budget 2026: மாற்றம் இல்லாத ஏமாற்றம் - பட்ஜெட் குறித்து திமுக எம்.பி. கனிமொழி பதிவு
- மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
- இது சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும்.
2026-27 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆன இது 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் ஆகும்.
தேர்தலை ஒட்டி இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் எந்த பிரத்யேக அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
இந்நிலையில், மாற்றம் இல்லாத ஏமாற்றம் என்று பட்ஜெட் குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "மத்திய பாஜக அரசை பட்ஜெட்டில் தமிழ்நாட்டை நினைவு கூர வைக்க தேர்தலால் கூட முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.