உள்ளூர் செய்திகள்

மாலை நேர உழவர் சந்தை தொடக்கம்

Published On 2022-10-19 15:16 IST   |   Update On 2022-10-19 15:16:00 IST
  • சம்பத் நகரில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் இன்று முதல் மாலை நேர உழவர் சந்தை செயல்பட தொடங்குகிறது.
  • இந்த சந்தைகளில் தானியங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், தின்பண்டங்கள் போன்றவை விற்பனை செய்யப்படும்.

ஈரோடு:

தமிழகத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் வேளாண் விற்பனை மற்றும் வேளா ண் வணிகத்துறை மூலம் உழவர் சந்தை தொடங்கப்பட்டது.

வெளி மார்க்கெட்டு களை விட உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விலை மலிவாக கிடைப்ப தால் உழவர் சந்தை மக்களி டம் பெரும் வரவேற்பு பெற்றது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாலை நேர உழவர் சந்தை திறக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி ஈரோடு மாவ ட்டத்தில் முதன்முறையாக சம்பத் நகரில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் இன்று முதல் மாலை நேர உழவர் சந்தை செயல்பட தொடங்குகிறது.

இதுகுறித்து வேளாண் துணை இயக்குனர்கள் சாவித்ரி, சண்முகசுந்தரம் ஆகியோர் கூறியதாவது:

தமிழக முதல்- அமைச்சரின் சிறப்பு திட்டமான மாலை நேர உழவர் சந்தை இன்று முதல் ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தையில் செயல்பட உள்ளது. மாலை நேர உழவர் சந்தை தினசரி மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

இந்த சந்தைகளில் பருப்பு வகைகள், பயறு வகைகள், தானியங்கள், காளான், உழவர் உற்ப த்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், சமையல் எண்ணெய், சத்துமாவு வகைகள், தின்பண்டங்கள் போன்றவை விற்பனை செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News