உள்ளூர் செய்திகள்

சேலம் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

Published On 2023-03-11 09:25 GMT   |   Update On 2023-03-11 09:25 GMT
  • இன்ஸ்பெக்டர் நெப்போலியனுக்கு நீதிபதி விசாரணைக்கு ஆஜராக பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
  • மேலும் வழக்கு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டார்.

கோபி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதி உள்ளே பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 30). இவர் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 9-ந் தேதி அன்று சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்ததாக கடம்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு கோபிசெட்டிபாளையம் முதலாம் வகுப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக அப்போதைய பங்களாபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் இருந்து வந்தார். இவர் கோர்ட்டில் சாட்சி விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதையடுத்து சாட்சி விசாரணைக்கு ஆஜராகாததால் இன்ஸ்பெக்டர் நெப்போலியனுக்கு நீதிபதி விஜய் அழகிரி விசாரணைக்கு ஆஜராக பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

மேலும் அவர் வரும் 15-ந்தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டார்.

தற்போது நெப்போலியன் சேலம் பள்ளபட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார்.

Tags:    

Similar News