உள்ளூர் செய்திகள்
மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
- பார்த்திபனை விட்டு பிரிந்து அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
- பவித்ராவை பார்த்து விட்டு வந்து இரவு வீட்டில் தூங்கினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி நேரு நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பார்த்திபன்(32). தொழிலாளி. இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன் பவித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக பவித்ரா, பார்த்திபனை விட்டு பிரிந்து அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். கடந்த 6-ந் தேதி பார்த்திபன் கள்ளிப்பட்டியில் உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு சென்று பவித்ராவை பார்த்து விட்டு வந்து இரவு வீட்டில் தூங்கினார்.
மறுநாளான நேற்று பார்த்திபனை எழுப்ப அவரது அம்மா அமிர்தவேணி சென்றார். அப்போது பார்த்திபன் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.