உள்ளூர் செய்திகள்

சட்ட விதிகளுக்கு மாறாக செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Published On 2022-12-31 15:13 IST   |   Update On 2022-12-31 15:13:00 IST
  • ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் உதவி ஆய்வாளர்கள் பல்வேறு கடைகள், நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
  • சட்ட விதிகளுக்கு மாறாக செயல்படும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு:

ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் பல்வேறு இடங்களில் எடையளவு சட்டம், குறைந்த பட்ச ஊதிய சட்டப்படி பல கடைகள், நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.

எல்.பி.ஜி. கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் 20 கிடங்குகளில் ஆய்வு செய்ததில் 3 நிறுவ னங்களின் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. 19 பேக்கரிகளில் ஆய்வு செய்ததில் 1 நிறுவனத்திலும், பால், பால் பொருட்கள் விற்பனை செய்யும் 11 நிறுவன ஆய்வில் ஒரு இடத்திலும் முரண்பாடு கண்டறியப்பட்டது.

பால் வழங்கும்போது அளவு குறைவு குறித்து 29 இடங்களில் நடந்த ஆய்வில் 11 இடங்களில் முத்திரையிடாமல் பயன்படுத்தியது தெரியவந்தது. பொட்டல பொருட்கள் விதிப்படி 17 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 2 இடத்திலும், சிகரெட் லைட்டர் விற்பனை செய்யும் 12 நிறுவனங்களில் நடந்த ஆய்வில் 1 இடத்தில் உரிய அனுமதியின்றி விற்பனை செய்ததால் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறைந்த பட்ச ஊதிய சட்டப்படி 45 கடைகள், வர்த்தக நிறுவனங்களில் நடந்த ஆய்வில் தொழிலாளர்களுக்கு குறந்த பட்ச ஊதியம் வழங்காத 7 நிறுவனங்கள் மீது தொழிலாளர் இணை ஆணையர் முன்னிலையில் கேட்பு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ள்ளது.

இதுபோன்ற சட்ட விதிகளுக்கு மாறாக செயல்படும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என உதவி ஆணையர் திருஞானசம்பந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News