வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த டிராக்டர் மெக்கானிக்
- அறையில் அழுகிய நிலையில் செந்தில்குமார் பிணமாக கிடந்துள்ளார்.
- இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பெரியசேமூர் கல்லான்கரடு ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (43). டிராக்டர் மெக்கானிக். இவரது மனைவி தீபா (32). இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
செந்தில்குமார் மதுவுக்கு அடிமையானதால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இதனால் கடந்த 5 வருடங்களுக்கு முன் தீபா தனது கணவரை பிரிந்து 2 மகன்களுடன், கருங்கல்பா ளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
செ ந்தில்கு மார் மட்டும் பெ ரியசே மூரில் உள்ள தனது வீட்டில் தனி யாக வசி த்து வருகிறார். இ ந்த நிலை யில் சம்பவத்த ன்று காலை செந்தில்கு மாரின் வீட்டி ல் இருந்து துர்நா ற்றம் வீசியு ள்ளது. இதையடுத்து எதிர் வீட்டில் இருப்பவர் சென்று செந்தில்குமாரின் வீட்டின் கதவை தட்டியு ள்ளார்.
ஆனால் கதவு திறக்கப்ப டாததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ள னர். அங்கே உள்பக்க அறையில் அழுகிய நிலையில் செந்தில்குமார் பிணமாக கிடந்து ள்ளார்.
இதுகுறித்த தகவலின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.