உள்ளூர் செய்திகள்

கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு

Published On 2022-12-27 15:04 IST   |   Update On 2022-12-27 15:04:00 IST
  • வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று தனது கரும்புக்காட்டுக்குள் நுழைவதை கண்டு அச்சமடைந்தார்.
  • வனத்துறை ஊழியர்கள் சிறு த்தையை வனப்பகுதிக்குள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு விரட்டினர்.

தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சாரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

வனவிலங்கு அவ்வ போது ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், கால்நடைகளை வேட்டையாடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட மல்குத்தி புரம்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி குருசாமி (45). இவர் தனது விவசாய தோட்டத்தில் கரும்பு, மஞ்சள் சாகுபடி செய்துள்ளார்.

நேற்று வழக்கம் போல் தனது விவசாய தோட்டத்தில் பணி செய்து கொண்டி ருந்தார். அப்பொழுது வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று தனது கரும்புக்காட்டுக்குள் நுழைவதை கண்டு அச்சமடைந்தார்.

இது குறித்து உடனடியாக தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனச்சரகர் சதீஷ் தலைமை யிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கால் தடங்களை ஆய்வு செய்தார்.

பின்னர் சிறுத்தை கரும்பு காட்டுக்குள் நுளை ந்தது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு கவசம் அணிந்து கரும்பு காட்டுக்குள் புகுந்து சிறு த்தையை வனப்பகுதிக்குள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு விரட்டினர்.

தொடர்ந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வனத்து றையினர் கூறியதாவது:

சிறுத்தையை கூண்டு வைக்க பிடிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இங்கு கால்நடைகள் அதிக அளவில் இருப்பதால் சிறுத்தை மீண்டும் வர வாய்ப்புள்ளது. எனவே சிறுத்தையை கூண்டு வைத்து படிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகள், கால்நடைகளை வளர்ப்ப வர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். தனியாக வனப் பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News