உள்ளூர் செய்திகள்

71 அடி உயர நவகாளியம்மன் சிலை

Published On 2022-12-09 14:52 IST   |   Update On 2022-12-09 14:52:00 IST
  • நவகாளியம்மன் உருவச்சலைக்கு விரைவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
  • தமிழகத்தில் எங்கும் இல்லாத 71 அடி உயர பிரம்மாண்டம் கொண்ட நவகாளியம்மன் சிலை இங்கு அமைந்துள்ளது

பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்து காரப்படி கிராமத்தில் 71 அடி உயர நவகாளியம்மன் பிரம்மாண்ட சிலை அமைக் கப்பட்டு நவகாளியம்மன் அறக்கட்டளையின் சார்பாக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இக்கோவிலில் குடும்பப் பிரச்சினை, தொழில் முன்னேற்றம், மாந்திரீகம், நட்சத்திரங்களுக்கு பரிகாரம், கால பைரவர், வாராகி அம்மன் ஆதி கருப்பண்ண சுவாமி போன்ற தெய்வங்கள் மற்றும் கரூர் சித்தரின் அருள் பெற்ற அய்யாக்கண்ணு சுவாமிகள் அருள்வாக்கு கூறி வருகிறார்.

விரைவில் 71 அடி உயரத்தில் உள்ள நவகாளியம்மன் உருவச்சலைக்கு சித்திரை 10-ம் நாள் 23.4.2023 தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.15 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

தமிழகத்தில் எங்கும் இல்லாத 71 அடி உயர பிரம்மாண்டம் கொண்ட நவகாளியம்மன் சிலை இங்கு அமைந்துள்ளது என விழா குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News