முகாமில் கலெக்டர் ரவிச்சந்திரன் பேசிய போது எடுத்த படம்.
வாசுதேவநல்லூர் அருகே காப்பீடு திட்ட பயனாளிகளுக்கு பதிவு செய்யும் முகாம்
- சிறப்பு மருத்துவ முகாமிற்கு கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
- முகாமில் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.
சிவகிரி:
முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழா பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்ட பயனாளிகளுக்கு பதிவு செய்யும் முகாம் வாசுதேவநல்லூர் வட்டாரம் நகரம் ஊராட்சி ஒன்றிய ஜவகர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மருத்துவர் முரளிசங்கர் வரவேற்றார். இணை இயக்குநர் (நலப்பணிகள்) மருத்துவர் பிரேமலதா திட்டம் குறித்து விளக்கி பேசினார் . தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., வாசுதேவநல்லூர் சதன் திருமலைக் குமார் எம்.எல்.ஏ., தனுஷ்குமார் எம்.பி., நகரம் ஊராட்சி தலைவர் அமுதா ரமணிபாய் செல்வமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் ரத்த அழுத்தம், சிறுநீர், எக்கோ, இ.சி.ஜி., மார்பக புற்றுநோய், தொழுநோய், காசநோய், கருப்பைவாய் புற்றுநோய் கண்டறிதல், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மன நல மருத்துவம், சித்த மருத்துவம் வழங்கி மருந்து, மாத்திரை சிகிச்சை வழங்கப்பட்டது.
இதில் சங்கரன்கோவில் மற்றும் தென்காசி ஆர்.டி.ஓ.க்கள், ஒன்றிய கவுன்சிலர் விஜயபாண்டியன், மருத்துவர்கள் செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வட்டார மருத்துவர் அலுவலர் மருத்துவர் திருமலை நன்றி கூறினார்.