உள்ளூர் செய்திகள்

மீன்வள பொறியியல் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்

Published On 2022-07-05 12:43 IST   |   Update On 2022-07-05 12:43:00 IST
  • பிளஸ்-2 வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மீன்வள பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்களுக்கு இதுவரை வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவில்லை.
  • இவர்களுக்கு பல்கலைக்கழகமும், தமிழக அரசும் எவ்வித வேலைவாய்ப்பையும் இதுவரை ஏற்படுத்தி தரவில்லை.

வேதாரண்யம்:

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் கடந்த 2015 முதல் மீன்வள பொறியியல் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டு இதுவரை ஐந்து பேட்ச் மாணவர்கள் படிப்பை முடித்து வெளியே வந்துள்ளனர். இதில் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் பிளஸ்-2-வில் அதிக மதிப்பெண்கள் பெற்று கவுன்சிலிங் அடிப்படையில் சேர்ந்து மிகுந்த எதிர்காலம் இருக்கும் என்று கனவோடு படித்து முடித்த உடன் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வெளியேறினர். ஆனால், இவர்களுக்கு பல்கலைக்கழகமும், தமிழக அரசும் எவ்வித வேலைவாய்ப்பையும் இதுவரை ஏற்படுத்தி தரவில்லை.

சுமார் 150 பொறியியல் பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காக காத்துள்ளனர். எனவே, தமிழக அரசும், மீன்வள பல்கலைக்கழகமும் மற்றும் மீன்வள பல்கலைக்கழகத்தினுடைய ஆட்சி மன்ற குழு உறுப்பினர் மற்றும் மீன் வளர்ச்சி கழகத்தினுடைய தலைவர் ஆகியோர் இந்த வாழ்வாதார பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் இராமசாமி தமிழக அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இதுகுறித்து மீன்வள பொறியாளர்களை ஒன்றுதிரட்டி விரைவில் முதல்-அமைச்சரை சந்தித்து நேரிடையாக கோரிக்கை தெரிவிப்பது எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News