உள்ளூர் செய்திகள்

 ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா மற்றும் துணைமேயர் ஆனந்தய்யா ஆகியோர் பூங்கொத்து வழங்கியும், சால்வை அணிவித்தும் பத்வாரை வாழ்த்தி வரவேற்றனர்.

தேச ஒற்றுமையை வலியுறுத்தி ராணுவ அதிகாரி ஒற்றுமை சுடர் ஓட்டம்

Published On 2022-12-04 14:53 IST   |   Update On 2022-12-04 14:53:00 IST
  • கன்னியாகுமரி முதல் டெல்லி வரை 3,000 கிமீ தூரம் ஒற்றுமை சுடர் ஓட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
  • பூங்கொத்து வழங்கியும், சால்வை அணிவித்தும் பத்வாரை வாழ்த்தி வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.

ஓசூர்,

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் கே.எஸ் பத்வார். இவர் உத்தரபிரதேச பட்டாலியனில் என்.சி.சி கமெண்டிங் அலுவலராக பணியாற்றி வருகிறார். தேச ஒற்றுமை, நாட்டு நலன், இளைஞர்களிடையே நாட்டுப்பற்றுஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக, பத்வார் கன்னியாகுமரி முதல் டெல்லி வரை 3,000 கிமீ தூரம் ஒற்றுமை சுடர் ஓட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

தேசிய மாணவர் படை உதயமாகி 75 ஆண்டு களானதை கொண்டாடும் வகையில் இந்த சுடர் ஓட்டத்தை அவர் மேற்கொண்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 20-ந் தேதி கன்னியாகுமரியில் தனது சுடர் ஓட்டத்தை தொடங் கிய பத்வார் தினமும் 50 கிலோமீட்டர் தூரம் ஓட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.

சுடர் ஓட்டம் தொடங்கிய 13 நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை கடந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக ஓசூர் வந்தார். கர்நாடகம் நோக்கி சென்ற அவரை, மாநில எல்லையான ஜூஜூவாடி பகுதியில் பள்ளி மாணவர்கள் தேசியக்கொடி ஏந்தி அவரை வரவேற்றனர். பின்னர், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா மற்றும் துணைமேயர் ஆனந்தய்யா ஆகியோர் பூங்கொத்து வழங்கியும், சால்வை அணிவித்தும் பத்வாரை வாழ்த்தி வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பத்வார் பேசினார். இதில், கர்னல் ஏ.கே. சிங்,லெப்டினென்ட் கர்னல் தாகூர், சூரஜ் நாயர், உள்பட பலர் கலந்து கொண்டனர். அடுத்த (ஜனவரி) மாதம் 18-ந்தேதி டெல்லியில் தொடர் ஓட்டத்தை நிறைவு செய்யும் பத்வார், ஜோதியை பிரதமர் மோடியிடம் வழங்குகிறார்.

Tags:    

Similar News