கலெக்டர் தீபக்ஜேக்கப்.
சுற்றுலா தொழில் முனைவோர்கள் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
- உலக சுற்றுலா தினத்தன்று விருதுகள் வழங்கப்பட உள்ளது.
- விருது வழங்கும் விழா நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-
சுற்றுலாத்துறை அமைச்சர் 2021-2022 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 30 முக்கிய முயற்சிகளை அறிவித்தி ருந்தார்.
தமிழ்நாட்டின் சுற்றுலாத்து றையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான சுற்றுலா விருதுகளை வழங்குவதற்கான அறிவிப்பும் ஒன்றாகும்.
அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சம்மந்தமான தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்ளூர்-வெளியூர் சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர், பிரதான சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயண, விமான பங்களிப்பாளர், சிறந்த தங்கும் விடுதி, உணவகம், சிறந்த வழிகாட்டி சாகச சுற்றுலா நிகழ்த்தியவர், சுற்றுலா தொடர்பான கூட்டம் மற்றும் மாநாடு அமைப்பாளர், சுற்றுலாவில் சமூக ஊடக தாக்கம் ஏற்படுத்தியவர், தமிழக சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் விளம்பர கருத்து சுற்றுலா விருந்தோம்பல், சுற்றுலா தொடர்பான சிறந்த கல்வி நிறுவனம் ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்படுபவர்கள் மற்றும் சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுத்து உலக சுற்றுலா தினமான 27.9.2023 அன்று விருது வழங்கப்பட உள்ளது. விருது வழங்கும் விழா நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில்மு னைவோர்கள் விருதுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து 15.8.2023 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
மேலும் இதுதொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள 04362-230984 மற்றும் 9176995873 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.