உள்ளூர் செய்திகள்

மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Published On 2022-08-08 09:42 GMT   |   Update On 2022-08-08 09:42 GMT
  • மாநிலம் முழுவதும் இன்று நடைபெறும் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு நெல்லை மாநகர பகுதி முழுவதிலும் உப மின் கோட்ட நிலையங்கள் முன்பு மின் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பிலும் இன்று தலைமை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

நெல்லை:

தமிழக அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து இன்று மின்வாரிய ஊழியர் கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் இன்று நடைபெறும் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு நெல்லை மாநகர பகுதி முழுவதிலும் உப மின் கோட்ட நிலையங்கள் முன்பு மின் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பிலும் இன்று தலைமை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

பாளை தியாகராஜ நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு பொறியாளர் கழகத்தைச் சேர்ந்த முருகன் தலைமை தாங்கினார். இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் சி.ஐ.டி.யு கந்தசாமி, பொறியாளர் இசக்கி பாண்டி, பெருமாள்சாமி, அர்ஜுனன், முருகன், கார்த்திக் குமார், பீர் முகமது ஷா, கண்ணன், முத்துக்குமார், கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் அலுவலகம் முன்பு அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News