உள்ளூர் செய்திகள்
மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் மூதாட்டி பிணமாக மீட்பு
- மூதாட்டியின் உடல் பிணமாக கிடப்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
- மூதாட்டி தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. ஆனால் அவர் யார் என்று தெரியவில்லை.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சந்தைக்கடை பகுதியில் பவானி ஆறு செல்கிறது.இந்த ஆற்றின் கரையோரத்தில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல் பிணமாக கிடப்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஆற்றின் கரையோரம் கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பிரேத பரிசோதனையில் மூதாட்டி தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. ஆனால் அவர் யார் என்று தெரியவில்லை.
இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக மீட்கப்பட்ட மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர். மேலும் இவர் தற்கொலை செய்து ெகாண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.