உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை மைனஸ் விலையை 40 காசுக்கு மேல் குறைக்க கூடாது- தேசிய ஒருங்கிணைப்பு குழு

Published On 2023-04-05 05:23 GMT   |   Update On 2023-04-05 05:23 GMT
  • கோழி தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வால் முட்டை பண்ணையாளர்கள் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள்.
  • முட்டை விற்பனை மைனஸ் 40 பைசா என இன்று நிர்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தற்போது முட்டை விலை 450 காசுகளாக உள்ளது. சமீப காலமாக கோழி தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வால் முட்டை பண்ணையாளர்கள் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் முட்டை விற்பனை மைனஸ் 40 பைசா என இன்று நிர்ணயம் செய்யப்பட்டது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் இந்த மைனஸ் 40 என்ற அளவிற்கு மிகாமல் விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அவ்வாறு எவரேனும் 40 பைசாவுக்கு மேல் மைனஸ் கேட்டால் அந்தந்த பகுதி பண்ணையாளர்கள் அவர்களின் பகுதிக்கு உட்பட்ட தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் வட்டாரக்குழு தலைவரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

Tags:    

Similar News