உள்ளூர் செய்திகள்

கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-02 10:16 GMT   |   Update On 2022-08-02 10:16 GMT
  • கடந்த 2 ஆண்டுகளாக பணி மாறுதல்கள் வழங்கப்படாமல் பணியாளர்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் உள்ளனர்.
  • பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டு தொடங்கப்பட்ட அலுவலகங்களுக்கு உடனடியாக பணியிடங்கள் அனுமதிக்க வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கம் சார்பில் தஞ்சை மாவட்ட முதன்மை க்கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்நடந்தது. இதற்க்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஆறுமுகம், திருவள்ளுவன், முதன்மை க்கல்வி அலுவலக கண்காணி ப்பாளர் நெடுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கலைக்குமார் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை த்தலைவர் சகாயராஜன், மாநில இணை செயலாளர் செங்குட்டுவன், மாநில துணை பொதுச்செயலாளர் ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், கல்வித்துறையில் அடிப்படை பணியாளர் முதல் நேர்முக உதவியாளர் வரை பணிபுரிபவர்களுக்கு காலிப்பணியிடங்கள் இருந்தும், கடந்த2 ஆண்டு களாக பணி மாறுதல்கள் வழங்கப்படாமல் பணியாளர்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் உள்ளனர். எனவே உடனடியாக பணி மாறுதல்கள்வழங்க வேண்டும்.பணி மாறுதல் வழங்கிய பின்னர் பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டு தொடங்க ப்பட்ட அலுவலகங்களுக்கு உடனடியாக பணியிடங்கள் அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் அரசா ணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.முடிவில் மாவட்ட பொரு ளாளர் அன்பழகன் நன்றி கூறினார்.

இதையடுத்து மாவட்ட தலைவர் ரமேஷ், மாநில துணை தலைவர் சகாயராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் முதன்மை கல்வி அதிகாரி சிவக்குமாரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். இந்த மனுவானது கல்வித்துறை அலுவலக ஆணையரிடம் சென்று சேரும் வகையில் அளி த்தனர்.

Tags:    

Similar News