மின்நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்.
கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம்
- கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது
- நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று அதிகமாக இருக்கிறது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம் செயற் பொறியாளர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செயற்பொறியாளர் கல்லிடைக்குறிச்சி கோட்டம் சுடலையாடும் பெருமாள் மற்றும் ஏனைய அதிகாரி களுக்கும் உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் பேசுகையில், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று அதிகமாக இருக்கிறது.
இதனால் அனைத்து மின் பொறியாளர்களும் தொடர் கண்காணிப்பில் பணிபுரிந்து மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் வனவிலங்கு களை மின் விபத்துகளில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு தொடர்ச்சியாக வனத்துறையுடன் இணைந்து ஆய்வு பணி மேற்கொண்டு வனவிலங்கு களால் மின்பாதைகள், மின் கம்பங்கள் சேதம் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்வதற்கு உத்தரவிட்டார்.
கல்லிடைக்குறிச்சி கோட்ட த்திற்கு உட்பட்ட சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வருவதால் சுற்றுலா தலங்களுக்கு தங்கு தடையின்றி மின் வினியோகம் வழங்க உத்தரவிட்டார். மேலும் மின் நுகர்வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்க அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம்.