உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணியை படத்தில் காணலாம்.

வி.எஸ்.ஆர். இண்டர்நேசனல் பள்ளி சார்பில் போதை பொருட்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2022-08-03 08:59 GMT   |   Update On 2022-08-03 08:59 GMT
  • விழிப்புணர்வு ஊர்வலத்தை திசையன்விளை தாசில்தார் செல்வகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • மாணவர்கள் போதை மற்றும் மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.

திசையன்விளை:

திசையன்விளை, வி.எஸ்.ஆர். இண்டர்நேசனல் பள்ளி சார்பில் போதை பொருட்கள் மற்றும் மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வி.எஸ்.ஆர்.வணிக வளாகம் முன்பு இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை திசையன்விளை தாசில்தார் செல்வகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் எலிசபெத் வரவேற்றார். மாணவர்கள் போதை மற்றும் மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தியவாறு சென்றனர். முக்கிய வீதிகளில் தெருக்கூத்து கலைஞர்கள் போல் பள்ளி மாணவர்கள் மதுவுக்கு எதிராக ஓரங்க நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் வாகனத்தில் சென்று விபத்துக்களை சந்தித்து பின்னர் குடும்ப உறுப்பினர்கள் கண்ணீர்விட்டு கதறுவது போன்ற காட்சிகளை மாணவர்கள் தத்ரூபமாக நடித்து காண்பித்தனர். ஆடல் பாடல் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் முக்கிய வீதிவழியாக சென்று புறப்பட்ட இடத்தை வந்தடைந்து ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பள்ளி நிர்வாகி சவுமியா ஜெகதீஷ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News