உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவ-மாணவிகள்.

தேவதானப்பட்டி மேரிமாதா கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு

Published On 2023-08-13 13:28 IST   |   Update On 2023-08-13 13:28:00 IST
  • கல்லூரி மாணவர்களுக்கு போதை அற்ற தமிழகம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தினர்.
  • கல்லூரி மாணவர்கள் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், ரெட் ரிப்பன் கிளப் மற்றும் ஆன்டி நர்கோடிக்ஸ் செல் ஆகியவை தேனி ஆல் தி சில்ரன் அறக்கட்டளையுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு போதை அற்ற தமிழகம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தினர். ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் ராஜேஷ் வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் ஜோஷி பரம்தொட்டு முன்னிலை வகித்து உரையாற்றினார்.

தேனி (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, சப்-இன்ஸ்ெபக்டர் நாகேந்திரன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் போதை அற்ற தமிழகத்தினை உருவாக்குவதில் கல்லூரி மாணவர்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு உரை ஆற்றினர். உளவியல் ஆலோசகர் பழனிச்சாமி போதைப் பழக்கம் ஓர் மனநோய் என்பது குறித்து உரையாற்றினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தமிழ்த்துறைத் தலைவர் ஆனந்த், ரெட் ரிப்பன் கிளப்பின் பொறுப்பாளர் டேவிட் பூண், ஆண்டி நர்கோடிக்ஸ் செல் பொறுப்பாளர் சந்திரமோகன் செய்திருந்தனர். கல்லூரி மாணவர்கள் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். ஆல் தி சில்ரன் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News