ரெட்டியார்பட்டி நாராயணன்
நாங்குநேரி தொகுதியில் குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும்- முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் கோரிக்கை
- நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்சினை அதிகமாக இருக்கிறது.
- கலெக்டர் தனிக்கவனம் செலுத்தி சிறப்பு குழு அமைத்து குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என ரெட்டியார்பட்டி நாராயணன் கோரிக்கை வைத்துள்ளார்.
நெல்லை:
நாங்குநேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்சினை அதிகமாக இருக்கிறது. தொகுதி மக்களின் அழைப்பின் பேரில் பல்வேறு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளேன். அப்போது பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து கோரிக்கை வைக்கின்றனர். நாங்குநேரி தொகுதியில் கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற குடிநீர் தட்டுப்பாட்டை பார்த்ததில்லை. மாவட்ட நிர்வாகம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாதது வருத்தமளிக்கிறது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பணம் இருக்கிறது. ஆனால் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் கொடுக்கப்படவில்லை. எனவே கலெக்டர் தனிக்கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் சிறப்பு குழு அமைத்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முழுவதும் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளளது.